என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வரத்து குறைவு"
ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு இடைய கோட்டை, அம்பிளிக்கை, முத்து நாயக்கன்பட்டி, கேதையறும்பு, கள்ளிமந்தையம் உள்ளிட்ட பல கிராமங்களில் இருந்து தினசரி தக்காளி விற்பனைக்காக கொண்டு வரப்படும். கடந்த சில நாட்களாக வரத்து நின்றதால் இந்த கிராமங்களில் இருந்து தக்காளி கொண்டு வரப்படவில்லை.
இதனால் மலை கிராமங்களான பால்கடை, வடகாடு, பாச்சலூர், பெத்தேல்புரம், பெரியூர் ஆகிய கிராமங்களில் இருந்தே தக்காளி கொண்டு வரப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 800 முதல் 900 பெட்டிகள் மட்டுமே வருகிறது. இது சராசரி வரத்தை விட மிகவும் குறைவு ஆகும்.
இதனால் விலையும் அதிகரித்துள்ளது. 14 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி ரூ.400 முதல் ரூ.420 வரை விற்பனையானது.
ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து தினசரி மதுரை, விருதுநகர், அருப்புக்கோட்டை, தூத்துக்குடி என பல்வேறு ஊர்களுக்கு தக்காளி அனுப்பி வைக்கப்படும். ஆனால் வரத்து குறைவு காரணமாக அப்பகுதி வியாபாரிகள் பெங்களூர், மதனபள்ளி, உடுமலைப்பேட்டை, பழனி, சிந்தாமணி போன்ற பல்வேறு ஊர்களுக்கு சென்று தக்காளி வாங்கிச் செல்கின்றனர்.
சிந்தாமணியில் ஒரு பெட்டி ரூ.300 முதல் ரூ.400 வரையிலும், பழனியில் ஒரு பெட்டி ரூ.300 முதல் ரூ.350 வரையிலும், உடுமலைப்பேட்டையில் ஒரு பெட்டி ரூ.350 முதல் ரூ.410 வரையிலும் கொள்முதல் செய்யப்படுகிறது. மார்க்கெட்டில் தக்காளி வரத்து குறைந்துள்ள நிலையில் விலை உயர்வு அடைந்துள்ளதால் மலை கிராம விவசாயிகள் ஆறுதல் அடைந்துள்ளனர்.
ஒட்டன்சத்திரம்:
தென் தமிழகத்தின் மிகப் பெரிய மார்க்கெட்டாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட் உள்ளது. இங்கு கள்ளிமந்தையம், விருப்பாட்சி, புதுசத்திரம், கேதையறும்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வருகின்றனர். குறிப்பாக அதிக அளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது.
இப்பகுதி நாட்டு தக்காளிகள் சுவை மிகுந்து காணப்படுவதால் வெளி மாவட்ட வியாபாரிகள் ஆர்வமுடன் தக்காளிகளை வாங்கி செல்கின்றனர். கடந்த சில நாட்களாக வரத்து அதிகரித்து காணப்பட்டதால் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்தது. 14 கிலோ கொண்ட பெட்டி ரூ.50 முதல் ரூ.60 வரையே விற்பனையானது. இதனால் விவசாயிகள் கடும் வேதனையடைந்து வருகின்றனர்.
பறிப்பு கூலிக்கு கூட விலை கிடைக்காததால் விரக்தியடைந்த அவர்கள் தக்காளிகளை செடிகளிலேயே விட்டு விட்டனர்.
தற்போது தக்காளி வரத்து குறைந்துள்ளதால் விலை ஓரளவு உயர்ந்து காணப்படுகிறது. 14 கிலோ கொண்ட பெட்டி ரூ.140 முதல் ரூ.150 வரை விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் ஓரளவு நிம்மதி அடைந்து தக்காளிகளை கொண்டு வர தொடங்கியுள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், தக்காளி உள்பட அனைத்து காய்கறிகளுக்கும் விலை கூடினாலும் குறைந்தாலும் எங்களுக்கு லாபம் சரியாக கிடைப்பதில்லை. பெரிய வியாபாரிகள் குறைந்த விலையில் வாங்கி அதிக விலைக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர்.
எனவே அரசே எங்களிடம் இருந்து நேரடியாக காய்கறிகளை கொள்முதல் செய்ய வேண்டும். பெங்களூரு, மைசூருவில் இருந்து தக்காளிகள் இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால் ஒட்டன்சத்திரம் பகுதி நாட்டு தக்காளிகளை போல் சுவை கிடையாது. மேலும் உடம்புக்கும் நல்லது. எனவே வேளாண் துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு காலத்துக்கு ஏற்ப பயிரிடுவது குறித்து அறிவுரை வழங்க வேண்டும் என்றனர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி பொங்கல் பண்டிகையை கொண்டாட தேவையான பூஜை பொருட்கள் மற்றும் காய்கறி-பழங்கள் வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
எப்போதும் பரபரப்பாக காணப்படும் சென்னை கோயம்பேடு மார்க்கெட், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் கூட்டத்துடனேயே காணப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒருநாளே இருப்பதால் காய்கறி-பழங்கள் மற்றும் பூக்கள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. குறிப்பாக மஞ்சள் குலை, இஞ்சி கொத்து, கரும்பு உள்ளிட்டவைகளும் அதிகளவு இறக்குமதி செய்யப்பட்டு இருக்கிறது.
ஆனாலும் விளைச்சல்-வரத்து குறைந்ததின் விளைவாக காய்கறி விலை அதிகரித்து இருக்கிறது. இதுகுறித்து கோயம்பேடு காய்-கனி-மலர் வியாபாரிகள் நலச்சங்கத்தின் பொருளாளர் பி.சுகுமார் கூறியதாவது:-
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் 200 முதல் 250 லாரிகள் வரை காய்கறி கொண்டுவரப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதத்துடன் ஆண்டின் கடைசி அறுவடை முடிந்தது. இதனால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து 20 முதல் 25 சதவீதம் வரை குறைந்துள்ளது. இதனால் காய்கறிகளின் விலையில் ரூ.5 முதல் ரூ.20 வரை உயர்ந்திருக்கிறது.
குறிப்பாக கடந்த வாரம் ரூ.20 வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ பீன்ஸ், தற்போது ரூ.40 வரை விற்பனை ஆகிறது. அதேபோல ரூ.20 வரை விற்பனை ஆன அவரை தற்போது ரூ.30 ஆக உயர்ந்திருக்கிறது. தக்காளி கடந்த வாரம் ரூ.20-க்கு விற்பனை ஆனது. தற்போது தக்காளி ரூ.45-க்கு விற்பனை ஆகிறது. அதேவேளை கேரட் விலை 50 சதவீதம் குறைந்திருக்கிறது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்ட காய்கறிகளின் விலை நிலவரம் (ஒரு கிலோ) வருமாறு:
பல்லாரி - ரூ.15 முதல் ரூ.20 வரை, உருளைக்கிழங்கு - ரூ.15 முதல் ரூ.20 வரை, கேரட் - ரூ.15 முதல் ரூ.20 வரை, பீன்ஸ் - ரூ.30 முதல் ரூ.40 வரை, நூக்கல் - ரூ.15 முதல் ரூ.25 வரை, சவ்சவ் - ரூ.15 முதல் ரூ.20 வரை, பீட்ரூட் - ரூ.15 முதல் ரூ.18 வரை, முட்டைக்கோஸ் - ரூ.12 முதல் ரூ.15 வரை, மிளகாய் - ரூ.20 முதல் ரூ.30 வரை, கொடைமிளகாய் - ரூ.25 முதல் ரூ.35 வரை, இஞ்சி - ரூ.60 முதல் ரூ.80 வரை, சேனைக்கிழங்கு - ரூ.13 முதல் ரூ.15 வரை, சேப்பங்கிழங்கு - ரூ.20 முதல் ரூ.25 வரை, கத்திரிக்காய் - ரூ.20 முதல் ரூ.25 வரை, வெண்டைக்காய் - ரூ.40 முதல் ரூ.50 வரை, அவரைக்காய் - ரூ.25 முதல் ரூ.30 வரை, கோவைக்காய் - ரூ.15 முதல் ரூ.20 வரை, கொத்தவரங்காய் - ரூ.20 முதல் ரூ.30 வரை, பாகற்காய்(பன்னீர்) - ரூ.30, பெரிய பாகற்காய் - ரூ.25, முருங்கைக்காய் - ரூ.50 முதல் ரூ.60 வரை, முள்ளங்கி - ரூ.15 முதல் ரூ.20 வரை, வெள்ளரிக்காய் - ரூ.15, புடலங்காய் - ரூ.20 வரை, தக்காளி - ரூ.40 முதல் ரூ.45 வரை, காலிபிளவர்(ஒன்று) - ரூ.15 முதல் ரூ.20 வரை, பீர்க்கங்காய் - ரூ.25 முதல் ரூ.30 வரை, சுரைக்காய் - ரூ.10 முதல் ரூ.15 வரை, சாம்பார் வெங்காயம் - ரூ.50 முதல் ரூ.60 வரை, தேங்காய் - ரூ.25 முதல் ரூ.30 வரை, வாழைக்காய் - ரூ.7 முதல் ரூ.10 வரை (ஒன்றுக்கு).
இவ்வாறு அவர் கூறினார்.
கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்ந்தாலும், பழங்களின் விலை குறைந்திருக்கிறது. பழங்களின் விலை நிலவரம் குறித்து கோயம்பேடு மார்க்கெட் அங்காடி நிர்வாகக்குழு உறுப்பினர் பழக்கடை கே.ஜெயராமன் கூறியதாவது:-
பொங்கலையொட்டி பழங்களின் வரத்தும் கோயம்பேடு மார்க்கெட்டில் அதிகரிக்கப்பட்டு உள்ளது. வரத்து அதிகரித்ததால் பழங்களின் விலை ரூ.20 முதல் ரூ.25 வரை குறைந்திருக்கிறது. குறிப்பாக காஷ்மீர் ஆப்பிள் மற்றும் மாதுளையின் விலை வெகுவாகவே குறைந்திருக்கிறது. கடந்த வாரத்தை காட்டிலும் காஷ்மீர் ஆப்பிள் மற்றும் ஆரஞ்சின் விலை தலா ரூ.30-ம், மாதுளை விலை ரூ.40-ம் குறைந்திருக்கிறது.
பழங்களின் விலை நிலவரம் வருமாறு:- (கிலோவில்)
வாஷிங்டன் ஆப்பிள்- ரூ.150 முதல் ரூ.160 வரை, ஷிம்லா ஆப்பிள்- ரூ.100 முதல் ரூ.120 வரை, காஷ்மீர் ஆப்பிள் (டெலிசியஸ்)- ரூ.80 முதல் ரூ.100 வரை, மாதுளை- ரூ.80 முதல் ரூ.100 வரை, சாத்துக்குடி- ரூ.40 முதல் ரூ.50 வரை, ஆரஞ்சு (கமலா)- ரூ.35 முதல் ரூ.45 வரை, கருப்பு திராட்சை- ரூ.60, பன்னீர் திராட்சை- ரூ.70, திராட்சை (சீட்லெஸ்)- ரூ.100, சப்போட்டா- ரூ.40, கொய்யா- ரூ.40, இலந்தைபழம்- ரூ.15, தர்பீஸ்- ரூ.15, அன்னாசிபழம்- ரூ.40 முதல் ரூ.50 வரை, வாழை- ரூ.250 முதல் ரூ.500 வரை.
இவ்வாறு அவர் கூறினார். #Koyambedumarket
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்